மார்ச் 13 வெளிவரும் கள்ளப்படம்

1424255229-5732மிஷ்கினின் உதவி இயக்குனர் வடிவேல் இயக்கி நடித்திருக்கும் கள்ளப்படம் அடுத்த மாதம் 13 -ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கள்ளப்படம் நான்கு இளைஞர்கள் ஒரு படம் எடுக்க முயற்சி செய்வதை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

அந்த நான்கு இளைஞர்களாக படத்தை இயக்கியிருக்கும் வடிவேல், படத்தின் இசையமைப்பாளர் கே மற்றும் படத்தின் எடிட்டர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நால்வரின் படம் எடுக்கும் முயற்சிதான் கள்ளப்படம்.

வித்தியாசமான கதை, திரைக்கதையில் உருவாக்கியிருக்கும் இப்படம் சமீபத்தில் சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

கள்ளப்படத்தை அடுத்த மாதம் 13 -ஆம் தேதி மிஷ்கினின் லோன் வுல்ஃப் புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries