ஒரு லட்சத்தை தாண்டிய இவனுக்கு தண்ணில கண்டம்

1424165937-4528வாரத்துக்கு பத்து படங்கள் வெளியாகிற இந்த காலகட்டத்தில் தங்களுடைய படத்தின்பால் ரசிகர்களை ஈர்க்க தலைகீழாக போராட வேண்டியிருக்கிறது. படத்துக்கு பெயர் வைப்பதிலிருந்து இந்த போராட்டம் ஆரம்பிக்கிறது.

எஸ்.என்.சக்திவேல் தனது படத்துக்கு வைத்த பெயர், இவனுக்கு தண்ணில கண்டம். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்று வித்தியாசமான பெயர். இந்தப் பெயருக்காகவே, அப்படி என்ன படமாக இருக்கும்? என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி… ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தனைக்கும் படத்தில் தெரிந்த முகங்கள் இல்லை. தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் தினகர்தான் படத்தின் நாயகன்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீஸரை வெளியிட்டனர். ஆச்சரியம்… ஒரு லட்சத்துக்கு மேல் இந்த டீஸர் ஹிட்ஸ் வாங்கியுள்ளது. படத்தை தயாரித்தவர்கள், நடித்தவர்கள், இயக்கியவர் என அனைவருக்கும் ஆச்சரியம்.

எல்லாம் பெயர் செய்த மாயம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries