அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்க ஆசை: கவுதம் மேனன்

4234cfb3-bdf0-4bd2-a363-9ea9459830e4_S_secvpfகவுதம் மேனன்-அஜித் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த வெற்றிநடை போட்டு வரும் படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் திரிஷா, அனுஷ்கா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இப்படம் பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க ஆசை உள்ளதாக இயக்குனர் கவுதம் மேனன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கமல், ரஜினி, அஜித், அமிதாப் பச்சன் ஆகியோரை வைத்து படமெடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அஜித்துடன் இணைந்து பணியாற்றிவிட்டேன். இப்போது மீண்டும் அஜித்தை வைத்து புதிய படத்தை இயக்க ஆசையாக உள்ளது என்று கூறினார்.

மேலும், சூர்யாவை வைத்து எடுக்கவிருந்த துருவ நட்சத்திரம் என்ற படத்தை மறுபடியும் எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு, சூர்யா தற்போது பல படங்களில் பிசியாக இருக்கிறார். அதனால் அந்த படத்தை அவரை வைத்து எடுக்க முடியாது என்று கூறினார்.

மேலும், தனிப்பட்ட முறையில் தனக்கும் சூர்யாவுக்குமிடையில் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்றும் கூறினார்.

கவுதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து இயக்கும் புதிய படத்தின் வேலைகளில் பிசியாக களமிறங்கியிருக்கிறார். அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries