ஏழு கதாநாயகிகளுடன் பிரஜின் நடிக்கும் மிரண்டவன்

4ca06b28-4e1c-42d4-8c44-43f751aede09_S_secvpf‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பேசாத கண்ணும் பேசுமே’, ‘திருடிய இதயத்தை’, ‘பலம்’ ஆகிய படங்களின் இயக்கிய முரளி கிருஷ்ணாவின் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ‘மிரண்டவன்’. இதில் நாயகனாக பிரஜின் நடிக்கிறார்.

முக்கிய கதாநாயகியாக அவள் பெயர் தமிழரசி, வீரம் படங்களில் நடித்துள்ள மனோசித்ரா நடிக்கிறார். இவருடன் சருணா, அஞ்சு கௌடா, சுவாதி, சவேரா, ஐஸ்வர்யா, ஜெஸ்சி ஆகிய ஆறு கதாநாயகிகளும் நடிக்கின்றனர். மிக முக்கியமான கதாபத்திரத்தில் ஜின்னா மற்றும் மகேந்திரன் நடித்துள்ளனர்.

கலர்புல்லான இப்படத்தில் காதல், திரில், சேசிங் என பரபரப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். இப்படத்தில் இயக்கினர் முரளிகிருஷ்ணா சமீப காலமாக நடைபெறும் பிளாக் மெயில் என்ற கிரைமை கையிலெடுத்துள்ளார்.

படத்தை பற்றி இயக்குனர் முரளி கிருஷ்ணா கூறும்போது, படத்தில் 7 கதாநாயகிகளும் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு நடித்துள்ளனர். யாருக்கும் ஒரு சீன் முன்ன பின்ன இருக்காது. எல்லோருமே முக்கியத்துவம் கொண்ட கதையில் டுவிஷ்ட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

மிரண்டவன் சமூகத்தின் கைவிலங்காக இருக்கும் ஒரு சம்பவத்தை படம் போட்டுக் காட்டும். தெளிவாகவும் நேர்மையாகவும் புட்டுப் புட்டு வைக்கும்.

நிச்சயமாக மக்களை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லித்தரும். என் படங்களில் எப்போது பாட்டுக்கள் காதுகளை இனிக்கச் செய்துவிடும். மிரண்டவன் படத்திலும் அந்த ஜாலம் இருக்கும் என்கிறார் இயக்குனர் முரளி.

இப்படம் சென்னை, பாண்டிச்சேரி, திருச்சி, மற்றும் கேரளா காடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்ரீவிஷ்ணு புரொடக்சன்ஸ் மற்றும் ஜெ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries