சித்தார்த்-சமந்தா இடத்தை பிடித்த ராணா-ஸ்ரீதிவ்யா

b536de72-8c16-4d5e-923b-811c8ad9df16_S_secvpfதுல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா நசீம் என நட்சத்திரக் கூட்டங்கள் நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய படம் ‘பெங்களூர் டேஸ்’.

இப்படத்தை அஞ்சலி மேனன் என்ற இளவயது பெண் இயக்குனர் கதை எழுதி இயக்கியிருந்தார். அன்வர் ரஷீத் தயாரித்திருந்தார்.

கடந்த வருடம் வெளியாகிய இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. பி.வி.பி. சினிமா நிறுவனமும், பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தில் ராஜுவும் இணைந்து இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தமிழ், தெலுங்கில் தயாரிக்கவுள்ளார்கள்.

இப்படத்தை சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்கிய பாஸ்கர் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இயக்கவுள்ளார் என்றும் இதில் சித்தார்த், சமந்தா, ஆர்யா, நித்யா மேனன், பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

ஆனால் இதை சித்தார்த்-சமந்தா இருவரும் மறுத்தனர். இப்படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறினார்கள். தற்போது இவர்களுக்கு பதிலாக ராணா-ஸ்ரீதிவ்யாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries