அஜித் வசனத்தை தலைப்பாக்கிய குப்பி இயக்குனர்

ada486a1-7dcb-4bc8-ab93-5b67abae125b_S_secvpf‘குப்பி’, ‘வனயுத்தம்’ போன்ற வித்யாசமான படங்களை இயக்கியதன் மூலம் பரபரப்பான இயக்குனர் என பாராட்டப்பட்ட ஏம்.எம்.ஆர்.ரமேஷ் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் பேசும் ‘ஒரு மெல்லிய கோடு’ என்ற வசனத்தை படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.

இதில் அர்ஜூன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷரா பட், மனிஷா கொய்ராலா, ரவி காளே, ஜீன், அருள்மணி ஆகியோரும் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு அர்ஜூனும்-மனிஷா கொய்ராலாவும் ஒன்றாக இணைந்து இந்த படத்தில் பணிபுரிகிறார்கள்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். அக்ஷயா கிரியேசன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தை திரில்லர் கலந்த ஆக்ஷன் படமாக உருவாக்குகிறார்கள்.

இப்படத்தின் தொடக்கவிழா இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள்.

இந்த விழாவில் கலந்துகொண்ட இசைஞானி இளையராஜா பேசும்போது, ஹாலிவுட் படங்களைவிட தமிழில் தான் அதிக படங்கள் தயாராகின்றன. நிறைய திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிவப்பு ரோஜாக்கள் படம் தான் நான் இசையமைத்த முதல் திரில்லர் படம். அந்த வகையில் இந்த ஒரு மெல்லிய கோடு படமும் வெற்றி பெரும் என்று கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries