பிரபல திரைபட அதிபர் டி.ராமாநாயுடு மரணம்

1424327504-1907பிரபல பட அதிபர் திரு. டி.ராமாநாயுடு அவர்கள் உடல்நல குறைவு காரணமாக ஐதராபாத்தில் நேற்று உயிரிழந்தார்.

திரு.டி.ராமாநாயுடு அவர்கள் திரையுலகில் ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை தயாரித்தவர் ஆவார். இவர் ஆந்திர மாநிலத்திலுள்ள கரம்சேடு கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் ராமாநாயுடு, ஷாம்பு பிலிம்ஸ் பட நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் 1963 ஆம் ஆண்டில் அனுராகம் என்ற தெலுங்கு படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

மேலும் 13 மொழிகளில், 150 படங்களை தயாரித்துள்ளார். சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த பெருமை இவருக்கு உண்டு.

தாதா சாகேப் பால்கே, பத்ம பூஷண், கவுரவ டாக்டர் பட்டம் போன்ற அறிய விருதுகள் இவர் திறமைக்கு கிடைத்த அங்கீராரம் ஆகும். இவரது மனைவியின் பெயர், ராஜேஸ்வரி. சுரேஷ், வெங்கடேஷ் என்ற 2 மகன்களும், லட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர். இளைய மகன் வெங்கடேஷ் தெலுங்கின் முன்னணி நாயகன் ஆவார்.

இவரது மகள் லட்சுமி, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். ராமாநாயுடுவின் இறுதிச்சடங்குகள் மாலை நடைபெறவுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries