மசாலா படத்தின் கதை தெரியுமா?

masala-padamபாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா, அறிமுக நடிகர் கௌரவ் ஆகியோர் நடிக்கும் படத்துக்கு மசாலா படம் என்று பெயர் வைத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் குமார் இயக்கும் இந்தப் படம் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. நில் கவனி செல்லாதே படத்தில் நடித்த லக்ஷ்மி தேவி ஹீரோயின்.

தமிழில் வெளியாகும் மசாலாப் படங்களை இணையத்தில் விமர்சித்து கிழிக்கும் ஒரு விமர்சகரிடம், எல்லா படத்தையும் கிழி கிழின்னு கிழிக்கிறியே. நான் ஒரு படம் தயாரிக்கிறேன்.

அதை நீ எப்படி எடுத்துக் கிழிக்கப்போறேன்னு பார்க்கிறேன் என்கிறார் ஒரு தயாரிப்பாளர். அப்படி அந்த விமர்சகர் எடுக்கிற படம்தான் மசாலா படம்.

இதில் மிர்ச்சி சிவா காதலில் தோல்வியுற்றவராகவும், பாபி சிம்ஹா தாதாவாகவும், லக்ஷ்மி தேவி ஆவணப்பட இயக்குனராகவும் நடித்து வருகின்றனர்.

சுவாரஸியமான கதை. அதை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்பதில்தான் மசாலா படத்தின் வெற்றி இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries