கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

fc13812e-67b7-4e98-8653-9bce97fbee01_S_secvpf‘ஜிகர்தண்டா’ படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படம் ‘இறைவி’. இந்த படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி-பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது.

தற்போது, இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக இப்படத்தை தயாரிக்கும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டள்ள அறிக்கையில், இறைவி படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கருணாகரன் துணை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகிகள் மற்றும் பிற நடிகர்கள், நடிகைகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொழில்நுட்பத் துறையில் ஒளிப்பதிவாளராக கேவ்மிக் யு ஆரி, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பாளராக விவேக் ஹர்ஷன், கலை இயக்குனராக விஜய் முருகன் ஆகியோர் பணியாற்ற உள்ளனர். ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்புக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள் என்று கூறியுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries