ஆபாச படத்தில் இருப்பது நானல்ல: நிக்கிகல்ரானி

0547a049-3570-4226-bc9a-e4f20eb032c4_S_secvpfசமீபத்தில் ரிலீசான ‘டார்லிங்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கிகல்ரானி. யாகவா ராயினும் நாகாக்க என்ற படத்தில் ஆதி ஜோடியாகவும் நடித்து வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இந்நிலையில் நிக்கிகல்ரானி பெயரில் ஆபாச படங்கள் இன்டர்நெட்டிலும், வாட்ஸ் அப்களிலும் சமீபத்தில் பரவியது. ஆடையில்லாமல் நிர்வாணமாக இருப்பது போல் அப்படங்கள் இருந்தன. அந்த ஆபாச படங்களில் இருப்பது நான் அல்ல என்று நிக்கிகல்ரானி மறுத்துள்ளார்.

இதுகுறித்து மாலைமலர் நிருபரிடம் அவர் கூறியதாவது:–

ஆபாச படம் போலியானது. அந்த படத்தில் இருப்பது நான் அல்ல. வேறு பெண்ணின் உடலோடு என் தலையை ஒட்டி மார்பிங் செய்துள்ளனர். வக்கிரபுத்திகாரர்களின் குரூரமான செயல் இது.

சினிமாவில் நன்றாக நடித்து சிறந்த நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதே என் லட்சியம். எனது முழு கவனமும் நடிப்பில்தான் இருக்கிறது. இந்த நிலையில் இது போன்ற படங்கள் வருவது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு நிக்கிகல்ரானி கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries