90களில் நடித்த நட்சத்திரங்கள் சந்திப்பு

509c1cfa-5660-46db-9653-a610f01dfd55_S_secvpfசினிமா உலகில் 1980களில் வெற்றிகரமாக வலம் வந்த நடிகர்கள், நடிகைகள் சந்தித்து ‘கெட் டுகெதர்’ கொண்டாடியதைப் போல 1990களின் முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடத்தியிருக்கிறார்.

இந்த சந்திப்பில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், சுந்தர்.சி, வெங்கட்பிரபு, பார்த்திபன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் விஜய், சூர்யா, ஜெயராம், அரவிந்த்சாமி, நடிகைகள் சிம்ரன், ரோஜா, மீனா, ஜோதிகா, சங்கீதா, மகேஸ்வரி, சங்கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

80களின் தென்னிந்திய நட்சத்திரங்கள் கடந்த சில வருடங்களாக தனிப்பட்ட முறையில் சந்தித்து வந்தனர். ஆனால், இந்த ஆண்டு அதை ஒரு விழாவாக நடத்தி பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள்.

அதுபோல் தற்போது நடந்துள்ள 90களின் சந்திப்பு நிகழ்ச்சி இனி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries