பஞ்சுமிட்டாய் – ஒரு முழுமையான விஜய் படம்

1424516977-4888விஜய் படம் என்றால் நடிகர் விஜய் படமல்ல, விஜய் தொலைக்காட்சி படம்.

விஜய் தொலைக்காட்சியில் காம்பியராக இருந்து பிரபல ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார் சிவ கார்த்திகேயன். அதனால், விஜய் தொலைக்காட்சியில் தோன்றும் நண்டும் சிண்டும் சிவ கார்த்திகேயனைப் போல் ஹீரோவாக முயன்று வருகின்றன. தமிழ் சினிமா அதற்கு சிவப்பு கம்பள வரவேற்பு தருவது வேடிக்கை.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் மகாபா ஆனந்த் நடித்திருக்கும் படம், பஞ்சுமிட்டாய். இதன் ஒரு பாடல் மட்டும் நேற்று விளம்பரத்துக்காக வெளியிடப்பட்டது.

ஆனந்த் நடித்திருக்கும் இந்தப் பாடலை பாடியவர் விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற திவாகர். இசை நல்லவேளையாக விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான இசையமைப்பாளர் கிடையாது, டி.இமான்.

விஜய் தொலைக்காட்சியில் காமெடி செய்து இப்போது தமிழ் சினிமாவில் அவ்வப்போது காமெடியனாக தலைகாட்டி வரும் ரோபோ சங்கர் தனது உடல் எடையை குறைத்து ஹீரோவாக நடிக்க கதை கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

ஆண்டவா தமிழ் சினிமாவை இந்த விஜய்யிடமிருந்து காப்பாற்று.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries