காயத்தை பொருட்படுத்தாமல் ரீ-டேக் எடுக்க வைத்த நான் கடவுள் ராஜேந்திரன்

bb61b312-b3fe-425a-8f1b-7d01ee107f87_S_secvpfஇயக்குனர் எஸ்.என்.சக்திவேல் இயக்கத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’. வி.வி.ஆர். சினிமாஸ்க் வெங்கட்ராஜ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யூடியூப்பில் பெரிய நடிகர்கள் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு உள்ளது.

அந்த டீசரில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஒரு நாயகன் போல் முழு டயலாக் பேசியதே அந்த வரவேற்பிற்கு பெரும் காரணமாய் அமைந்திருக்கிறது. இது குறித்து இயக்குனர் சக்திவேல் கூறியதாவது:

ராஜேந்திரன் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் கதை எழுதும் பொழுதே அவர்தான் இக்கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டோம்.

அவரின் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘டார்லிங்’ ஆகிய படங்களில் இருந்த கதாபாத்திரங்களைவிட இப்படத்தில் கதையோடு நகரும் கதாபாத்திரமாக வருவார்.

ஒரு முழு நீள நகைச்சுவை படத்திற்கு, அவரது டயாலாக் டெலிவரியும், பாடி லாங்வேஜும் இப்படத்திற்கு பக்க பலமாய் அமைந்திருக்கிறது. இவரை வைத்தே டீசரை கட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினோம்.

ஒரு காட்சியில் அதிக எடையுள்ள துப்பாக்கியை வைத்துக்கொண்டு மரத்தின் மேல் இருந்து குதிக்க வேண்டும். டூப் போடாமல் அவரே குதித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதை துளிக்கூட பொருட்படுத்தாமல் ரீ-டேக் போகலாம் என்று சொன்னார்.

இவ்வாறு இயக்குனர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries