ஆர்யா-அனுஷ்கா இணையும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்

2be83098-5fa8-47be-9cb9-74ab6f67c8aa_S_secvpfஆர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘மீகாமன்’. இப்படத்தை தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மேலும், யட்சன், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பி.வி.பி. புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். மேலும், மாஸ்டர் பரத், ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குனரான பிரகாஷ் கொவேலமுடி இயக்குகிறார். இவர் தெலுங்கு உலகின் பிரபல இயக்குனரான ராகவேந்திரா ராவின் மகனாவார்.

தெலுங்கில் சித்தார்த்-ஸ்ருதிஹாசன் நடித்த ‘ஒன்ஸ் அப்பான் ஏ வாரியர்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். தமிழுக்கு இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். கீரவாணி இசையமைக்கிறார். கதை மற்றும் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் கனிகா திலோன் என்பவர் எழுதுகிறார். இவர் பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ரா ஒன் படத்திற்கும் திரைக்கதையாசிரியராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் முதல்நாள் படபிடிப்பு இன்று தொடங்கியது. இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்க, கனிகா திலோன், பிரகாஷ் கொவேலமுடி ஆகியோர் கிளாப் அடித்து தொடங்கி வைத்தனர்

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries