பசுபதி ஹீரோவாக நடிக்கும் ம சு க

1401352040-9721பிரபல நடிகரான பிறகு பசுபதியை தமிழில் அதிகம் பார்க்க முடியவில்லை. அதேநேரம் மலையாளத்தில் ஹீரோவாக, முக்கிய குணச்சித்திர வேடத்தில் என பல படங்களில் நடித்துவிட்டார். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 10 எண்றதுக்குள்ள உள்பட சில படங்கள்.

தமிழ், மலையாளத்தில் தயாராகும் ம சு க என்ற த்ரில்லரில் பசுபதி பிரதான வேடத்தில் நடிக்கிறார். மஞ்ஞ சுவப்பு கறுப்பு என்பதன் சுருக்கம்தான் ம சு க.

இதில் பசுபதி வக்கீலாகவும், ஜனனி அய்யர் பத்திரிகையாளராகவும் நடிக்கின்றனர். முக்கியமான ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் பிரதாப் போத்தன்.

வரும் ஏப்ரல் மாதம் இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்குகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries