சண்டமாருதம் திருட்டு விசிடி – சரத்குமார் போலீஸில் புகார்

1412861751-3258தமிழ் சினிமாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது திருட்டு விசிடி. படம் வெளியான மறுநாளே திருட்டு விசிடிகள் புழக்கத்துக்கு வந்துவிடுகின்றன.

கடந்த 20 -ஆம் தேதி சரத்குமார் கதை எழுதி தயாரித்து நடித்த சண்டமாருதம் திரைக்கு வந்தது. அடுத்தநாளே வழக்கம்போல் அதன் திருட்டு விசிடி எல்லா கடைகளிலும் தாராளமாக கிடைத்தன.

அதனால் அதிர்ச்சியானவர் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தாணு, செயலாளர் பி.எல்.தேனப்பன், துணைத்தலைவர் கதிரேசன், பொருளாளர் சத்யஜோதி தியாகராஜன் ஆகியோருடன் திருட்டு விசிடி தடுப்புப்பிரிவு போலீஸ் சூப்ரண்ட் ஜெயலட்சுமியை சந்தித்து புகார் தந்தார்.

இதையடுத்து நிருபர்களிடம் பேசிய சரத்குமார், திருட்டு விசிடி திரைத்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது, எவ்வளவு முயன்றும் அதனை தடுக்க முடியவில்லை என கவலை தெரிவித்தார்.

திருட்டு விசிடி அதிகம் தமிழகத்தில் புழங்கக் காரணம், திரையரங்குகள் நிர்ணயித்திருக்கும் டிக்கெட் கட்டணத்தைவிட அதிகமாக கொள்ளை அடிப்பதுதான். திருட்டு விசிடி குறித்து பேசும் திரையுலகினர் தியேட்டர் கொள்ளை குறித்து பேசாமல் கள்ள மௌனம் இருப்பதுதான் திருட்டு விசிடி பரவலுக்கு முக்கிய காரணம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries