கார்த்தி படம் மூலம் ஆடியோ கம்பெனியை அறிமுகம் செய்யும் ஸ்டுடியோ கிரீன்

04270b12-a2c3-467f-a95b-ab855c3bf12a_S_secvpf2006ம் ஆண்டும் சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சில்லுனு ஒரு காதல். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான ஞானவேல் ராஜா, தொடர்ந்து பல படங்களை தயாரிக்க ஆரம்பித்தார்.

சூர்யா, கார்த்தி நடித்து வரும் பெரும்பாலான படங்களை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிப்பது மட்டுமல்லாமல் படங்களை வாங்கி விநியோகமும் செய்து வருகிறது.

தற்போது இந்நிறுவனம் ஆடியோ கம்பெனி தொடங்கவுள்ளது. கார்த்தி-லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பன் படம் மூலம் தனது ஆடியோ கம்பெனியான கிரீன் ஆடியோவை அறிமுகம் செய்யவுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மார்ச் 5ம் தேதி நடக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ படத்தின் ஆடியோவையும் கிரீன் ஆடியோ நிறுவனமே வெளியிடுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries