ஜெயம் ரவி, த்ரிஷா நடிக்கும் அப்பாடக்கரின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

1424760786-1672நீண்ட இடைவெளிக்குப் பிறகு லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் படம் அப்பாடக்கர். சுராஜ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிவரும் படம். ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடித்து வருகின்றனர்.

சுராஜின் வழக்கமான கமர்ஷியல் பேக்கில் தயாராகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

யுகே செந்தில்குமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இசை எஸ்எஸ் தமன். மதன் கார்க்கி, அண்ணாமலை பாடல்கள் எழுதியுள்ளனர்.

இதற்குமுன் ஜெயம் ரவி, த்ரிஷா நடித்த பூலோகம் இன்னும் வெளியாகாமலே உள்ளது முக்கியமானது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online