சினிமாவை விட்டு விலகவில்லை; மீண்டும் நடிப்பேன் – ஜெனிலியா

dc43762b-3f9e-4236-a356-175d6d9c60e7_S_secvpfதமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் ஜெனிலியா முன்னணி நடிகையாக இருந்தார். 2012–ல் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.

ஜெனிலியாவுக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ரியான் என பெயரிட்டுள்ளனர். சினிமாவில் இனிமேல் ஜெனிலியா நடிக்க மாட்டார் என்று செய்திகள் வெளிவந்தன. இதனை ஜெனிலியா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:–

சினிமாவை விட்டு விலகுவதாக எப்போதும் நான் சொன்னது இல்லை. தற்காலிகமாகத்தான் ஒதுங்கி இருக்கிறேன். 12 வருடங்களாக ஓய்வு இல்லாமல் நடித்தேன். எனவே தான் திருமணத்துக்கு பிறகு கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுத்தேன்.

தற்போது மீண்டும் நடிப்பதற்கு தயாராகி விட்டேன். நடிப்பு என்பது உயிர் மூச்சு போன்றது அதை விடமுடியாது. நடிப்பு மேல் உள்ள காதல் இன்னும் எனக்கு குறையவில்லை. நடிப்பதில் தான் சந்தோஷம் இருக்கிறது. நடித்து ரசிகர்களையும் சந்தோஷப்படுத்துவேன்.

இவ்வாறு ஜெனிலியா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries