சிவகார்த்திகேயனின் காக்கிசட்டை படத்துக்கு வரிச்சலுகை

9d026bb6-b545-42f0-bd8b-2bb293765e8b_S_secvpfசிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்த காக்கி சட்டை படம் இன்று ரிலீசானது. துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். காக்கி சட்டை படத்தை தணிக்கை குழுவினர் ஏற்கனவே பார்த்து ‘யு’ சான்று அளித்தனர். தற்போது அரசும் ‘காக்கி சட்டை’ படத்துக்கு வரிவிலக்கு அளித்துள்ளது.

காக்கி சட்டை படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 370 தியேட்டர்களிலும் கேரளாவில் 80 தியேட்டர்களிலும் ரிலீசாகிறது. உலகம் முழுவதும் மொத்தம் 750 தியேட்டர் திரையிடப்படுகிறது.

‘காக்கி சட்டை’ படம் பற்றி சிவகார்த்திகேயன் கூறும் போது, இயக்குனர் செந்தில் குமார் நம்பிக்கையோடு இந்த படத்தில் என்னை நம்பினார். இந்த கேரக்டருக்காக என்னையும் நான் தயார்படுத்திக் கொண்டேன்.

ஒவ்வொரு படத்திலும் முந்தைய படத்தைவிட சிறப்பாக நடிக்க முயற்சிக்கிறேன். நம்ம வீட்டு பையன் வேலைக்கு போகும்போது சந்திக்கும் நியாயமான யதார்த்தமான பிரச்சினைகள் தான் கதை என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries