பெரிய நடிகையாக வேண்டும்: புதுமுக நடிகையின் ஆசை

42a56970-256f-432c-9988-1347679a9fb4_S_secvpfஅறிமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் படம் ‘பட்ற’. இப்படத்தின் நாயகனாக மிதுனும், நாயகியாக வைதேகியும் அறிமுகமாகியிருக்கிறார்கள். சாம்பால் என்ற புதியவரும் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை வைதேகி கூறும்போது,

இப்படத்தில் நான் ஒரு கல்லூரி செல்லும் பெண்ணாக வருகிறேன். எனக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. பரதம், கேரள நாட்டியம் என மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.

எனக்கு ஜோடியாக வரும் கதாநாயகன் மிதுன் நன்றாக நடித்துள்ளார். எனது பள்ளி பரீட்சைகள் பொழுது ‘முன் காமம்’ என்ற காதல் பாடலின் ஷூட்டிங்கும் வேகமாய் நடந்த வந்தது. இரண்டையும் மேனேஜ் செய்வதற்கு மிகவும் சிரமமாய் இருந்தது.

‘பட்ற’ படத்தில் நடித்தது புதிய அனுபவங்களை தந்தது. என்னதான் நான் கேரளாவில் இருந்தாலும் இதுவரையில் நான் கடற்கரை பார்த்ததே இல்லை. எங்க அப்பாவிற்கு கடல் என்றால் பயம் அதனால் என்னை கடற்கரைக்கு அழைத்து சென்றதேயில்லை.

பாண்டிசேரியில் நடந்த ‘ பட்ற’ படத்தின் ஷூட்டிங் அன்றுதான் நான் ஒரு கடற்கரை எப்படி இருக்கும் என்று பார்க்க முடிந்தது.

ஒரு நடிகையாக இருப்பதால்தான் நிறைய இடங்களுக்கு செல்ல முடிகிறது. இதற்காகவே நான் பெரிய நடிகையாக வேண்டும் அதற்கு நன்றாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் வளர்ந்துள்ளது. இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு நன்றி” என்று ஆச்சர்யம் கலந்த உறுதியுடன் கூறினார் நாயகி வைதேகி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries