ஆஸ்திரேலிய திரைப்பட விழாக்களில் கள்ளப்படம்

Kallappadam-Movie-posterஆஸ்திரேலியா தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளால் விழாக்கோலம் பூண்டுள்ளது. சிறந்த அணிகளின் அணிவகுப்பாய் போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில், தமிழ் சினிமா கொண்டாடக்கூடிய ஒரு நிகழ்வும் நடந்துள்ளது.

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் வடிவேல் இயக்கியுள்ள ‘கள்ளப்படம்’ ஆஸ்திரேலியாவில் ஜூலை 2 முதல் 12 வரை நடைபெறும் ‘ரெவலேஷன் பெர்த் சர்வதேச திரைப்பட விழா’ மற்றும் செப்டம்பர் 11 முதல் 20 வரை நடைபெறவுள்ள மெல்போர்ன் அன்டர்கிரவுண்ட் திரைப்பட விழா ஆகிய விழாக்களில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

‘கள்ளப்படம்’ சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளது படக்குழுவினருக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் வடிவேல் கூறும்போது, ‘கள்ளப்படம்’ ஒரு கமர்ஷியல் படம். நான்கு இளைஞர்கள் அவர்களது முதல் படவாய்ப்புக்காக சந்திக்கும் விஷயங்களின் கோர்வையே இப்படம்.

அதன் கதைக்காக ஒரு திரைப்பட விழாவில் அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கையில் அனுப்பினோம். வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ரீராம் சந்தோஷ், காகின் ஆகியோருடன் இசையமைப்பாளர் கே-யும் நடிக்கிறார். நாயகியாக லட்சுமி ப்ரியா நடிக்கிறார். ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கே இசையமைக்கிறார். இப்படத்தை மிஷ்கின் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். இப்படத்தின் பாடல்களை நடிகர் விஷாலின் வி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries