ஜீரோ சைஸ் படத்தில் அனுஷ்கா இரு கெட்-அப்

282a86b6-ab3b-4056-885d-28548011f713_S_secvpfஅனுஷ்கா நடிப்பில் ‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’ ஆகிய இரண்டு பிரம்மாண்டமான படங்கள் வெளியாகவுள்ளது. இவ்விரு படங்களும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஆர்யாவுடன் இணைந்து ‘ஜீரோ சைஸ்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இப்படத்தில் மாஸ்டர் பரத், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் ஸ்ருதிஹாசன் கௌரவ தோற்றத்திலும் நடிக்கிறார். இப்படத்தை பிரகாஷ் கோவல முடி இயக்குகிறார். இவர் தெலுங்கு உலகின் பிரபல இயக்குனரான ராகவேந்திரா ராவின் மகனாவார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.

இப்படம் நடிகைகள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் நிலவும் ஜீரோ சைஸ் கலாச்சாரம் பற்றிய கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதில் அனுஷ்கா உடல் எடை அதிகம் உள்ள கேரக்டரிலும் உடல் மெலிந்த கேரக்டரிலும் என இரு கெட்டப்களில் தோன்றுகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries