மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. காமெடி பண்ண வரும் அதர்வா?

e6a5b6f9-eca9-4a55-9439-9ef273a3e65a_S_secvpfஅதர்வா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘இரும்புகுதிரை’. ஆக்ஷன், திரில்லர் படமாக வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தேடித்தராவிட்டாலும் அதற்குமுன் அதர்வா நடித்து வெளிவந்த ‘பரதேசி’ படத்தில் அவரின் நடிப்பு பிரபலமாக பேசப்பட்டதால் அவருக்கு படவாய்ப்புகள் தொடர்ந்த வண்ணம் இருந்து வந்தது.

இப்படத்திற்கு பிறகு தற்போது ‘ஈட்டி’, ‘கணிதன்’, ‘சண்டிவீரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இப்படங்கள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படங்களுக்கு பிறகு காமெடியில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்க அதர்வா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதர்வா நடித்துள்ள ‘ஈட்டி’ படத்தில் ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கிறார். ‘கணிதன்’ படத்தில் ‘மெட்ராஸ்’ படநாயகி கேத்ரின் தெரசா ஜோடியாக நடித்துள்ளார். ‘சண்டிவீரன்’ படத்தில் ‘கயல்’ ஆனந்தி ஜோடியாக நடித்துள்ளார். இப்படங்கள் அனைத்தும் இந்த வருடத்தில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries