நான்கு பேய்களுடன் ராகவா லாரன்ஸ் பேயாட்டம்

f59643a5-ea6f-45e2-b0ca-68806d750a2e_S_secvpfராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வெளிவந்த பேய் மற்றும் திரில்லர் படம் முனி. இப்படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை முனி-2 காஞ்சனா என்ற பெயரில் படமாக்கினார். இந்த படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது அடுத்த பாகத்தையும் ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு முதலில் ‘முனி-3 கங்கா’ என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால், தற்போது ’காஞ்சனா 2’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் ராகவா லாரன்ஸ் நான்கு விதமான பேய் கெட்டப்பில் நடிக்கிறாராம். 15, 25, 40, 50 வயது பெண்களின் பேய் பிடித்தவர் போன்று வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறாராம்.

ஏற்கெனவே காஞ்சனா படத்தில் திருநங்கை, முதியவர், மனவளர்ச்சி குன்றிய இளைஞன் ஆகிய மூன்றுவிதமான பேய்கள் பிடித்தவராக ராகவா லாரன்ஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை லாரன்ஸ் இயக்கி, நடித்து வருகிறார். டாப்சி கதநாயாகியாக நடித்து வருகிறார். நித்யா மேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கோவை சரளா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த வருடத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries