வில்லியாக நடிக்க ஆசை: சோனா

787db6f9-3622-4525-8719-0d5cb95370a7_S_secvpfசோனா பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். குத்தாட்டமும் ஆடி உள்ளார். ‘கனிமொழி’ என்ற படத்தை தயாரிக்கவும் செய்தார். கடந்த சில வருடங்களாக சோனா படங்கள் எதிலும் நடிக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஏ.வெங்கடஷ் இயக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து சோனா கூறியதாவது:–

நான் நிறைய மலையாள படங்களில் நடித்து வருகிறேன். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் எட்டு மலையாள படங்களில் நடித்து இருக்கிறேன். மலையாள பட உலகில் பிசியான நடிகையாக இருக்கிறேன். பிரியதர்ஷன் இயக்கும் படத்திலும் நடிக்கிறேன்.

தமிழில் தற்போது ‘ரொம்ப நல்லவன்டா நீ’ படத்தில் நடிக்கிறேன். சகுந்தலா என்ற கவுன்சிலர் கேரக்டரில் வருகிறேன். கதையும், கேரக்டரும் பிடித்து இருந்ததால் நடிக்க சம்மதித்தேன். நல்ல கேரக்டர்களில் மட்டுமே இனி மேல் நடிப்பது என முடிவு செய்துள்ளேன். இந்த படத்தில் நான் எதிர்பார்த்த மாதிரி வேடம் அமைந்து இருக்கிறது. வில்லி வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு சோனா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries