விஷ்ணுவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த அஜித்

45f9873c-e0ae-4c93-8e49-a4f436098e92_S_secvpf‘வெண்ணிலா கபடிகுழு’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகி ‘குள்ளநரி கூட்டம்’, ‘நீர்ப்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு. இவர் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியில் நட்சத்திர வீரராவார். இவருடைய அதிரடியில் சென்னை அணி ஏகப்பட்ட வெற்றிகளை குவித்துள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின் போது விஷ்ணுவுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, சிகிச்சை மூலம் அவருடைய வலது கையில் மெட்டல் பிளேட் வைக்கப்பட்டது. பிளேட் வைத்த கையோடு அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு வரை நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்தார் விஷ்ணு.

இந்நிலையில், தற்போது அவரது வலது கையில் பொருத்தப்பட்ட மெட்டல் பிளேட் இன்று மருத்துவமனையில் நீக்கப்பட்டது. அதே மருத்துவமனையில் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சில தினங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை. இன்று விஷ்ணுவிற்கு மெட்டல் பிளேட் நீக்கப்பட்டதை அறிந்த அஜித், விஷ்ணுவை உடனே சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இது குறித்து விஷ்ணு கூறும்போது, ‘அஜித் வந்து என்னை பார்த்தது நலம் விசாரித்தது எனக்கும் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அஜித் ஒரு எளிமையான இனிமையான மனிதர்’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries