உறவுகள் சம்பந்தப்பட்ட கதையாக தேடும் கொம்பன் இயக்குனர்

4f46ba69-0bad-449a-8d6f-80694afbdaa8_S_secvpfகார்த்தி-லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கொம்பன்’. இப்படத்தில் ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா இயக்கியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. இதன்பிறகு, இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இப்படத்தை முழுக்க முழுக்க பரமக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலேயே படமாக்கியுள்ளனர். மற்ற படங்களைவிட இப்படத்திற்கு ஏதாவது வித்தியாசம் காட்டவேண்டும் என்பதற்காக அந்த பகுதியிலேயே உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, நடிப்பது, பாடல் எழுதுவது என பயன்படுத்தியுள்ளனர்.

இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து வாழ்வை தத்ரூபமாக காட்ட தனது ஒளிப்பதிவில் கடும் சிரத்தை எடுத்துள்ளாராம். இப்படத்தின் இயக்குனர் முத்தையா தனது முந்தைய படமான ‘குட்டிப்புலி’ படத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசப்போராட்டத்தை காட்டியிருந்தார். இந்த படத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை காட்டியுள்ளார். இனி தான் எடுக்கும் படங்களிலும் இதேபோல் உறவுகள் சம்பந்தப்பட்ட கதையாகவே எடுக்கவுள்ளாராம்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து கெட்டப்பில் நடிக்கும் கார்த்தி, இந்த படத்தில் தனது முந்தைய படமான பருத்திவீரனின் சாயல் வந்துவிடக்கூடாது, அதைவிட ஒருபடி மேலே இருக்கவேண்டும் என்பதற்காக கடும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை லட்சுமிமேனன் கலந்துகொள்ளவில்லை. அவர் பிளஸ்-2 தேர்வில் பிசியாக இருப்பதால் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries