சிவாவுக்கு காமெடி; சிம்ஹாவுக்கு ஆக்சன்: மசாலா கலக்கும் மசால பட இயக்குனர்

4636e624-ba33-4884-b63d-55a75b5fb88a_S_secvpfசிவா-பாபி சிம்ஹா கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘மசாலா படம்’. இவர்களுடன் கௌரவ் என்ற புதுமுகமும் நடிக்கிறார். லட்சுமி தேவி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ‘நில் கவனி செல்லாதே’ படத்தின் நாயகி ஆவார். இப்படத்தை ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய லட்சுமண் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்தியாவுக்கே உரித்தான மசாலா படங்களை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி வரும் லட்சுமண் கூறும்போது, வெற்றி பெரும் மசாலா படங்கள் எதற்காக வெற்றி பெறுகிறதென்று எவராலும் சுட்டிகாட்டுவது கடினம். அப்படிப்பட்ட மசாலா படங்களை அடிப்படையாக வைத்து ஒரு படம் பண்ணலாம் என்று நானும் தயாரிப்பாளர் விஜயும் முடிவு செய்து எடுக்க ஆரம்பித்ததே ‘மசாலா படம்’.

இந்த படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மசாலா படங்களில் வரும் காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என ஒரு விஷயத்தை சொல்லும். தனது நடிப்பில் குறும்புடன், நகைச்சுவையாய் இருக்கும் மிர்ச்சி சிவா காமெடிக்கும், வசனங்களில் தனது பிரத்யேக உச்சரிப்பின் மூலம் கலக்கும் சிம்ஹாவிற்கு குறைவான வசனங்களுடன் ஆக்ஷன் பகுதிக்கும், பல வருடமாய் தமிழ் படங்களின் கதை கருவாய் உள்ள ‘காதல்’ பகுதியாக கௌரவ் மற்றும் குடும்பங்களை திரையரங்கிற்கு இழுத்து வரும் ‘செண்டிமெண்ட்’ பகுதிக்கு லட்சுமி தேவி என இப்படி கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளோம்.

‘ஜிகர்தண்டா’, ‘சூது கவ்வும்’ போன்ற படங்களை நியு ஏஜ் சினிமாக்கள் என்று குறிப்பிடுவார்கள். அத்தகைய நியு ஏஜ் சினிமாக்களின் பாணியில் மசாலாக்களை கலந்து சொல்லியிருக்கிறோம்.

படத்தின் தயாரிப்பாளர் முதல் நடித்த நடிகர்கள் வரை அனைவரும் நண்பர்களே. படம் எடுத்ததே ஒரு டூர் போல் இருந்தது. அனைத்து மசாலா படங்களை போலவே எங்கள் படமும் பேமிலி ஆடியன்சிற்கு கண்டுகளிக்க உகந்ததே.

இவ்வாறு மகிழ்ச்சியுடன் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries