ஜப்தி நோட்டீஸ் எதிரொலி: வீட்டுக்கான நிலுவை வரி தொகையை நயன்தாரா–ஜெயராம் செலுத்தினர்

51a304d4-cd90-4c87-bc0d-f636b7397bf2_S_secvpfநீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட லவ்டேல் பகுதியில் ராயல் காஸ்டில் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பில் 142 வீடுகள் உள்ளது.

இதில் சில அபார்ட்மென்ட் உரிமையாளர்கள் நகராட்சிக்கு சொத்து வரி பாக்கி வைத்திருந்தனர். அந்த பட்டியலில் திரைப்பட நடிகர் ஜெயராம், நடிகை நயன்தாராவும் இருந்தனர்.

பலமுறை எச்சரிக்கை விடுத்தும் வரி கட்டாத காரணத்தால் நகராட்சி அதிகாரிகள் அந்த வீடுகளில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டினர்.

இந்த நிலையில் நடிகர் ஜெயராம் தனது வீட்டுக்கு கட்ட வேண்டிய கடந்த ஆண்டு வரி பாக்கி மற்றும் இந்த ஆண்டு வரி பாக்கி ஆகியவற்றை சேர்த்து ரூ.10 ஆயிரத்தை நகராட்சியில் கட்டினார்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சிவக்குமார் கூறியதாவது:–

லவ்டேல் பகுதியில் உள்ள சில அபார்ட்மென்ட்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி வைத்திருப்பது தெரிய வந்து ஜப்தி நோட்டீஸ் அனுப்பினோம்.

இதையடுத்து நடிகர் ஜெயராம் வீட்டுக்கான நிலுவை வரி புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.

நயன்தாரா வீட்டுக்கு கடந்த நிதியாண்டுக்கும் மற்றும் இந்த நிதி ஆண்டுக்கும் அந்த தொகையை சேர்த்து ரூ.6 ஆயிரம் பாக்கி இருந்தது. அவர் சார்பில் வீட்டை பராமரிக்கும் நபர் கட்டிச்சென்றார்.

லவ்டேல் பகுதியில் வீடு வாங்கியுள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்த பிரமுகர்கள் இங்குள்ள வீடுகளை பராமரிக்க பணியாளர்களை வைத்துள்ளனர். இதன் காரணமாக இங்குள்ள சட்ட, திட்டங்கள் அவர்களுக்கு சரிவர தெரிவதில்லை. இதுவே வரி செலுத்தாமல் போவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries