சந்தானத்தை பழி வாங்கிய ஆர்யா

arya-santhanam_141941269510ஆர்யாவும் சந்தானமும் நல்ல நண்பர்கள். இவர்கள் திரைக்கு அப்பாலும் நல்ல நண்பர்களாக பழகி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதற்கு சான்றாக பல்வேறு சம்பவங்கள் இருந்தாலும் சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடந்த ஒரு சம்பவம் அதை மேலும் உறுதிப்படுத்தியது.

சந்தானம் மற்றும் ஆஷ்னா சாவேரி மீண்டும் இணைந்து நடிக்கும் ‘இனிமே இப்படிதான்’ படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

அருகிலேயே ஆர்யா விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கும் ‘யட்சன்’ படப்பிடிப்புக்காக சென்றிருக்கிறார். ஆர்யாவிற்கு சந்தானம் அருகில் இருப்பது தெரிந்ததும் அந்த படப்பிடிப்பு தளத்துக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார்.

அது ஒரு சம்பிரதாயத்துக்கு வரும் வருகை அல்ல என சந்தானத்துக்கு தெரிய வாய்ப்பில்லை. படப்பிடிப்பில் சந்தானம் நடன காட்சியில் மும்முரமாக ஈடுப்பட்டு வந்திருக்கிறார். அந்த நேரம் அங்கு ஆர்யா செல்ல, ஒரே களேபரம் ஆகியிருக்கிறது.

டான்ஸ் மாஸ்டர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆர்யா, சந்தானத்திடம் இன்னும் நல்லா நடனம் ஆட வேண்டும் என நிர்பந்தித்து கொண்டே இருந்திருக்கிறார்.

நண்பர் அக்கறையில் தானே சொல்கிறார் என மீண்டும் மீண்டும் ஆடிய சந்தானத்துக்கு, தனது சக்தி மொத்தமும் இழந்து சோர்வு அடைந்த பின்னர்தான் ஆர்யா வேண்டுமென்றே அவ்வாறு செய்வதை உணர்ந்துக் கொண்டிருக்கிறார்.

திரையில் தான் ஆர்யாவை கலாய்த்தற்கு பழி வாங்கும் முயற்சியாக அவர் இப்போது ஷூட்டிங்கில் தன்னை வேண்டுமென்றே களைப்படையும் வரை ஆடவைத்ததை தெரிந்துக் கொண்ட சந்தானம், ஐயா சாமி போதும் உங்க விளையாட்டு, எனக்கூறி தப்பித்திருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries