கார் விபத்தில் நடிகை ஊர்வசி சாரதா உயிர் தப்பினார்: கடவுள் அருளால் பிழைத்ததாக பேட்டி

797ecc55-9934-480b-a2b0-19a559fd3aa2_S_secvpfநடிகை ‘ஊர்வசி’ சாரதா, ஐதராபாத்தில் நடந்த கார் விபத்தில் உயிர் தப்பினார். கடவுள் அருளால் பிழைத்ததாக அவர் கூறினார்.

‘துலாபாரம்’ படத்தில் நடித்ததன் மூலம் அகில இந்திய சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘ஊர்வசி’ விருது பெற்றவர் சாரதா. எம்.ஜி.ஆர். நடித்த, ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். சிவாஜிகணேசன் நடித்த, ‘ஞான ஒளி’ படத்தில் அவருக்கு மகளாக நடித்தார்.

சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்துவரும் ‘ஊர்வசி’ சாரதா குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா சென்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின், அவர் விஜயவாடாவில் இருந்து காரில் ஐதராபாத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய காருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு கார் திடீரென்று விபத்துக்குள்ளாகி, தலைகுப்புற புரண்டது. பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த ‘ஊர்வசி’ சாரதாவின் கார் விபத்துக்குள்ளான கார் மீது மோதியது. அதில், அதிர்ஷ்டவசமாக சாரதா உயிர் தப்பினார்.

இந்த விபத்து பற்றி ‘தினத்தந்தி’ நிருபரிடம், ‘ஊர்வசி’ சாரதா கூறியதாவது:-

‘சினிமாவில்தான் நான் கார் விபத்துக்குள்ளாவதை பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை. என் வாழ்க்கையில் நடந்த முதல் விபத்து இது. முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது என் கார் மோதியதும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன். என்றாலும், தலைகுப்புற புரண்டு கிடந்த காரை நோக்கி நான் ஓடினேன்.

அந்த காருக்குள் ஒரு கணவனும், மனைவியும் சிக்கிக்கொண்டார்கள். அவர்களை வெளியே எடுத்து தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளியவைத்தேன். அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் சேர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து கணவன்-மனைவியை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். கடவுள் அருளால்தான் நான் உயிர் பிழைத்ததாக கருதுகிறேன்.

இவ்வாறு நடிகை ‘ஊர்வசி’ சாரதா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries