ஏப்ரல் ரேசில் களம் இறங்கும் ரோமியோ ஜூலியட்

d1beb533-494e-41de-8df2-f71cc6852a06_S_secvpfஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் பூனம் பஜ்வா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் வம்சி கிருஷ்ணா, கணேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். லக்ஷ்மன் இயக்கி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்காக மும்பையிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான முறையில் செட் அமைத்து பாடல் காட்சிகளை படமாக்கினர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படத்தின் பாடல்களை மார்ச் 12-ம் தேதியும், படத்தை ஏப்ரல் 10-ம் தேதியும் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த தேதியில் கமலின் உத்தம வில்லன் படமும், ஏப்ரல் 2-ம் தேதி உதயநிதி ஸ்டாலினின் ‘நண்பேன்டா’ படமும், சண்முக பாண்டியன் நடிக்கும் ‘சகாப்தம்’ படமும் வெளியாக இருக்கிறது.

பள்ளி விடுமுறை மாதம் என்பதால் முன்னணி நடிகர்களின் பல படங்கள் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries