கோலாலம்பூரில் டி.இமானின் நேரடி இசை நிகழ்ச்சி

67496fc8-e908-410f-bd65-f8bd49fb59fb_S_secvpfஇசையமைப்பாளர்கள் பலரும் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக கான்செர்ட் என்ற பெயரில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் உள்ளிட்ட பலரும் வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் பல்வேறு நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் டி.இமானும் இணைந்துள்ளார். இதுவரை எந்தவொரு நேரடி இசை நிகழ்ச்சியையும் நடத்தாத டி.இமான், தற்போது முதன்முறையாக ரசிகர்களுக்காக நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது. வருகிற மே மாதம் 2-ந் தேதி நடக்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில், பின்னணி பாடகர்கள் ஹரிச்சரண், சந்தோஷ் ஹரிச்சரண், திவாகர், சுவேதா மோகன், வந்தனா சீனிவாசன், பூஜா மற்றும் டி.இமான் இசையில் பாடிய அத்தனை பின்னணி பாடகர்களும் கலந்து கொண்டு பாடவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ‘விஜய் டிவி’ புகழ் பாவனா தொகுத்து வழங்க இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries