மலேசியாவில் கில்லி பம்பரம் கோலி விளையாடும் மூன்று ஹீரோக்கள்

1425897144-7559தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கில்லி, பம்பரம், கோலி ஆகியவற்றின் பெருமையை சொல்ல வரும் படம், கில்லி பம்பரம் கோலி.

பொதுவாக இதுபோன்ற பாரம்பரிய படங்கள் தமிழகத்தில் எடுப்பதுதான் வழக்கம். இயக்குனர் மனோஹரன் இந்தப் படத்தை மலேசியாவில் எடுக்கிறார். இந்தப் படத்தில் மூன்று நாயகர்கள். நரேஷ், பிரசாத், தமிழ். ஹீரோயின் தீப்தி ஷெட்டி. இவர்கள் தவிர கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கியமான வேடத்தில்.

படம் பற்றி கேட்டதும் அருவியாக கொட்டத் தொடங்கினார் இயக்குனர் மனோஹரன்.

“நமது பாரம்பரிய விளையாட்டுகளான கில்லி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டுக்கள் இன்றைய நவீன யுகத்தில் மறைந்து கொண்டிருக்கிறது. தெருவில் இறங்கி விளையாடுவது என்பது இன்று குறைந்துவிட்டது.

செல்போன் டெலிவிஷன், இன்டர்நெட் போன்ற நவீனங்கள் தெரு விளையாட்டை மாற்றிவிட்டது. கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற நவீன விளையாட்டுக்கள் கில்லி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டின் சக்தியை குறைத்துவிட்டது.

கில்லி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டை முழுமையாக உணர்ந்து எக்ஸ்பர்ட்டான நான்கு பேர் தொழில் நிமித்தமாக மலேசியா சென்று அங்கே அவர்களுக்கு உருவான ஒரு பிரச்சனைக்கு இந்த விளையாட்டுக்களைப் பயன்படுத்தி எப்படி தீர்த்துக் கொள்கிறார்கள் என்பது கதை.

பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட அந்த விளையாட்டுகள் அந்த நால்வரின் வாழ்க்கைக்கு எப்படி உபயோகமாகிறது என்பதை கலகலப்பாக உருவாக்கி உள்ளோம்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries