மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணியில் நானி

e82c61ae-d256-458e-9d74-69154952abd6_S_secvpfமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தில் துல்கர் சல்மான்-நித்யாமேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ‘அலைபாயுதே’ பாணியிலான காதல் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். வருகிற ஏப்ரல் 17-ந் தேதி படத்தை வெளியிட மும்முரமாக பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படத்தை வெளியிடவிருக்கின்றனர். தற்போது இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஓ பங்காரம்’ படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தெலுங்கு பதிப்பில் பிரபல தெலுங்கு நடிகரான நானி துல்கர் சல்மானுக்கு டப்பிங் பேசுகிறார். வேறொரு நடிகருக்கு டப்பிங் கொடுப்பது இதுதான் முதல் முறை என நானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, இப்படத்தில் டப்பிங் பேச மணிரத்னம் சார் என்னை அழைக்கும்போது, எப்படி அதை தவிர்க்க முடியும். நான் வேறொரு நடிகருக்கு டப்பிங் கொடுப்பது இதுதான் முதல் முறை என்று கூறினார்.

நானி தமிழில் வெளிவந்த ‘நான் ஈ’, ‘ஆஹா கல்யாணம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries