விக்ரம், அஜித், ஆர்யாவுடன் நடிக்க நயன்தாராவுக்கு ஒரே நேரத்தில் அழைப்பு

b60dca8c-9b8b-42a3-97d3-bacb4ce90b19_S_secvpfதமிழ் பட உலகில் நயன்தாரா ‘நம்பர் ஒன்’ கதாநாயகி இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.

தற்போது அவர் கைவசம் மாயா, நண்பேன்டா, இது நம்ம ஆளு, தனி ஒருவன், மாஸ், நானும் ரவுடிதான் என ஆறு படங்கள் கைவசம் உள்ளன. இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து ஒன்றன் பின் ஒன்றாக ரிலீசாக உள்ளன.

சம்பளத்தையும் நயன்தாரா உயர்த்தி இருக்கிறார். முன்னணி கதாநாயகர்கள் நயன்தாராவை ஜோடியாக போடும்படி வற்புறுத்துவதால் அவர் மார்க்கெட் வலுவாக இருக்கிறது. தற்போது விக்ரம், அஜித், ஆர்யா படங்களில் நடிக்க ஒரே நேரத்தில் அழைப்பு வந்துள்ளது.

விக்ரம் படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். இவர் தற்போது சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் விக்ரம் பட வேலைகளை துவக்குகிறார்.

அஜித்துடன் ஏற்கனவே ஜோடியாக நடித்துள்ளார். இது போல் ஆர்யாவுடனும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நடித்து உள்ளார்.

அஜித்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவை அழைக்கின்றனர். முதலில் சுருதிஹாசனை தேர்வு செய்தார்கள். இப்போது அவரை மாற்றி விட்டு நயன்தாராவை அணுகியுள்ளனர்.

இந்த மூன்று படங்களுக்கும் ஒரே நேரத்தில் கால்சீட் கொடுக்க முடியாது என்பதால் எதை ஏற்பது என்ற குழப்பத்தில் நயன்தாரா இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries