நந்திதா தாஸ் போல் நடிக்க ஆசை: லட்சுமி ப்ரியா

de43f53e-423c-40c3-85d7-4fbbd9fd6d4c_S_secvpfதிரையுலகத்தில் கதாநாயகிகள் சில வருடங்களே நிலைத்து நிற்கின்றனர். அவர்கள் புகழின் உச்சியில் இருக்கும்போது ரசிகர்கள் பார்வை அவர்களை சுற்றியே இருக்கும். கால போக்கில் அவர்களுக்கு வாய்ப்பில்லாமல் இருக்கும்பொழுது ஒருவரும் அவர்களை திரும்பி பார்ப்பதில்லை.

அத்தகைய தருணத்தில் அவர்கள் அந்த புகழை மறுபடியும் அடைவதில் பெரும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ‘கள்ளப்படம்’ திரைபடத்தில் அப்படி ஒரு நாயகி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் ‘சுட்டகதை’ லட்சுமி ப்ரியா.

லட்சுமி ப்ரியா கதாபாத்திரம் குறித்து படத்தின் இயக்குனர் வடிவேல் கூறும்போது, லட்சுமி ப்ரியா மிக நேர்த்தியான நடிகை. இப்படத்தில் லீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதாப்பாத்திரம் லட்சுமி ப்ரியா செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.

லட்சுமி ப்ரியா இந்த கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார். இந்தக் கதாப்பாத்திரம் படத்தில் தன் சூழ்நிலையை மாற்ற பல தைரியமான முடிவுகளை மேற்கொண்டு வரும் என்றார்.

லட்சுமி ப்ரியா கூறும்போது, வடிவேல் இந்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றி கூறும்பொழுதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடிப்பதற்கு வாய்ப்புள்ள ஒரு கதாப்பாத்திரம்.

இந்தக் கதாப்பாத்திரம் இல்லாமல் கதையில்லை என்றளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல். எனக்கு நந்திதா தாஸ் அவர்களை போல் தைரியமான கதாப்பாத்திரங்களில் நடிக்க பிடிக்கும். கள்ளப்படத்தில் லீனா கதாப்பாத்திரம் அத்தகைய ஒரு தைரியமான பெண் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries