தனுஷுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கும் எமி ஜாக்சன்

5bf1f001-3f34-49be-80e7-dd9411abc963_S_secvpfஎமி ஜாக்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஐ’. சங்கர் இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் எமி ஜாக்சனின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இப்படத்தை அடுத்து எமி ஜாக்சனுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தற்போது உதயநிதியுடன் இணைந்து நடித்து வருகிறார் எமி. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘மான்கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படம் காமெடி படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தையடுத்து கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் வெளியாகி 100 நாட்களை கடந்து வெற்றி பெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’ கூட்டணி மீண்டும் இணைகிறது. இப்படத்தில் தனுஷ் நாயகனாவும், எமி ஜாக்சன் நாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். வேல்ராஜ் இயக்கும் இப்படத்தை அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இதுபற்றி எமி ஜாக்சனிடம் கேட்டபோது, என்னுடைய அடுத்த படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளேன். இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதுவரைகூட என்னால் காத்திருக்க முடியவில்லை என்று சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online