மீண்டும் தள்ளிப் போனது சிம்புவின் வாலு

1f288e21-4228-43c2-b78b-26aee7a72e21_S_secvpfசிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வாலு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடிக்கும் போது சிம்பு, ஹன்சிகா காதல் பிரச்சனைகளால் படப்பிடிப்பு சிறிது காலம் நின்றது. பின்னர் சமரசமாகி கடைசியாக படப்பிடிப்பை முடித்து, பாடல்கள், டிரைலர்கள் மற்றும் வீடியோ பாடல்கள் ஆகியவற்றை வெளியிட்டனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியது. இதையடுத்து இப்படத்தை மார்ச் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது இப்படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படுகிறது.

ஒரு பாடல் இன்னும் படமாக்கப்படவில்லை என்றும், அப்பாடலை விரைவில் முடித்து மார்ச் 27ம் தேதி வெளியிடவும் படக்குழுவும் திட்டமிட்டிருந்தனராம். ஆனால், பாடல் காட்சியை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறதாம். எனவே, இப்படத்தை மே 1ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries