விஜய்யுடன் இணைந்து நடிக்கும் பாரதிராஜா?

467ed91c-8f21-453a-be56-31cd5a94c12b_S_secvpf‘கத்தி’ படத்திற்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, சுருதி ஹாசன் நடித்து வருகிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் பிறந்தநாளில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தையடுத்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோரிடம் பேசி வருகிறார்கள்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். விஜய்யுடன் இணைந்து பாரதிராஜா நடிக்கவுள்ளார். இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பாரதிராஜா ஏற்கனவே சுசிந்திரன் இயக்கத்தில் வெளியான ‘பாண்டியநாடு’ படத்தில் விஷாலுக்கு அப்பாவாக நடித்தார். இதில் பாரதிராஜாவின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries