காஞ்சனா 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

02e1c3c3-c650-412d-9e03-0667a51c8ef0_S_secvpfலாரன்ஸ் நாயகனாக நடித்து இயக்கிய முனி படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை காஞ்சனா என்ற பெயரில் எடுத்தார். அதுவும் வெற்றிகரமாக ஓடியது. தற்போது இப்படங்களின் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தை எடுக்கிறார். இதற்கு முனி 3 கங்கா என பெயரிடப்பட்டது.

ஆனால் தற்போது இப்படத்தின் தலைப்பை காஞ்சனா-2 ஆக மாற்றியிருக்கிறார்கள். முனி 3 கங்கா என்ற பெயரிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் படத்தின் தலைப்பை மாற்றியிருக்கிறார்கள்.

காஞ்சனா படத்திற்கும் காஞ்சனா- 2 படத்திற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. முற்றிலும் மாறுபட்ட கதை என்கிறார் ராகவா லாரன்ஸ்.

அதிக பொருட்செலவில் திகில் படமாக தயாராகியுள்ள இப்படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன் தயாரித்து, சன் பிக்சர்ஸ் வழங்க, உலகம் முழுவதும் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

இந்த படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்திலும் லாரன்சே நாயகனாக நடிக்கிறார். அவரே இயக்கவும் செய்கிறார். இதில் நாயகிகளாக டாப்ஸி, நித்யா மேனன் நடிக்கின்றனர். ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries