டண்டணக்கா சர்ச்சையும் ஜெயம் ரவியின் ஐயகோ அறிக்கையும்

1426317331-1412ஜெயம் ரவி நடித்திருக்கும் ரோமியோ ஜுலியட் படத்தில் டண்ணடக்கா எனத் தொடங்கும் பாடலை வைத்திருக்கிறார்கள். டண்டணக்கா என்றால் உடனே டிஆர்தான் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். அவரது பேனா உதிர்த்த பொன் வரிகள் அவை.

இந்தப் பாடலில் டிஆரை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். இது அவரை அவமானப்படுத்துகிறது என்றும் கௌரவப்படுத்துகிறது என்றும் இரண்டு தரப்பு வடம் இழுக்கிறது. இந்நிலையில் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“ரோமியோ ஜூலியட் படத்தில் நான் டி.ஆரின் ரசிகனாக நடித்திருக்கிறேன். அவரது தன்னம்பிக்கையும், எதுவும் என்னால் முடியும் முயற்சி செய்து பார்.. இதுவும் முடியும் இதுக்கு மேலும் முடியும் என்கிற அவரது தன்னம்பிக்கையும் தான் என் கதாப்பாத்திரத்தின் இன்ஸ்பிரேசன்.

அதனால் தான் அவரது எவர்கிரீன் வரிகளான ‘டண்டணக்கா’ என்கிற வரிகளையும், அவரையும் சேர்த்து இந்த பாடலில் பதிவு செய்து இருக்கிறோம். எந்த ஒரு வரிகளிலும், வார்த்தைகளிலுமே அவரை குறைவாகவோ குறிப்பிடவில்லை. அவரை பெருமைப்படுத்தும் விதமாகவே பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

நான் எப்போதுமே எந்த விதமான கருத்து மோதல்களிலும் சிக்கியதில்லை. எங்க அப்பா, அம்மாவுக்கு எப்படி செல்லப் பிள்ளையாக இருக்கிறேனோ அதே மாதிரியே எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாக இருக்க ஆசைப் படுகிறேன்.

அதனால் தயவு செய்து இந்த பாடலை யாரும் ரீமிக்ஸ் செய்து தன்னம்பிக்கை தமிழனான டி.ஆர் அவர்களை புண்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries