ஒருதலைராகம் சங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் பிரஜன்

7d59f75e-82b4-4235-8370-7209bf077b3f_S_secvpf‘ஒருதலைராகம்’ பட நாயகன் சங்கர் ‘மணல் நகரம்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் தற்போது ரிலீசாகி ஒடிக்கொண்டு இருக்கிறது.

இதையடுத்து இன்னொரு காமெடி திரில்லர் படத்தை டைரக்டு செய்கிறார். மணல் நகரம் படத்தில் நடித்த பிரஜனே இதிலும் நாயகனாக நடிக்கிறார். மணல் நகரம் படத்தை எடுத்த எம்.ஐ.வசந்தகுமாரே இந்த படத்தையும் தயாரிக்கிறார். இதற்கு கிரேமெட்டர் என்று பெயர் வைக்கலாமா என்று பரிசீலிக்கப்படகிறது.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் வசந்தகுமார் கூறும்போது,

மணல் நகரம் நல்ல வரவேற்பை பெற்றதால் அதில் பணியாற்றியவர்கள் இணைந்து இந்த படத்தை எடுக்கிறோம். பாதி இந்தியாவிலும் இன்னொரு பாதி லண்டனில் நடப்பது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. லண்டனில் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை துவக்குகிறோம். இதில் அதிக கேரக்டர்கள் இருக்கும். காமெடி, திரில்லர் படமாக உருவாகிறது.

முதல் பாதி கல்லூரி பின்னணியில் கலகலப்பாக நகரும். லண்டன் பயணப்பட்டதும் வேறு களத்துக்கு மாறும். பெண் மேல் ஆணுக்குள்ள அதித்த காதலால் ஏற்படும் நிகழ்வுகளே கதை என்றார்.

பிரஜன் கூறும்போது, மணல் நகரம் படத்தில் எனது நடிப்புக்கு பாராட்டுகள் குவிகிறது. அடுத்தும் இதே கம்பெனி படத்தில் நடிக்கிறேன். இதுவும் வலுவான கேரக்டராக இருக்கும் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries