தல, தளபதி ரசிகர்களை மோதவிட்ட சாமி

e6b3bd74-eed7-42f6-9278-2c9338b10eb2_S_secvpf‘சிந்து சமவெளி’, ‘மிருகம்’, ‘உயிர்’ உள்ளிட்ட படங்களை இயக்கியர் சாமி. இவர் தற்போது இயக்கிவரும் புதிய படம் ‘கங்காரு’. இப்படத்தில் அர்ஜூனா கதாநாயகனாக நடிக்க அவரின் தங்கையாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். மேலும் அவரின் காதலியாக வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார்.

தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீநிவாஸ் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் அஜித் ரசிகர்களையும், விஜய் ரசிகர்களையும் மோதவிடும் காட்சி ஒன்றை சாமி வைத்துள்ளாராம்.

படத்தில் நாயகனின் தங்கையாக வரும் பிரியங்கா தல ரசிகையாகவும், அவரின் காதலியாக வரும் வர்ஷா விஜய் ரசிகையாகவும் வருகிறார்களாம். இருவரும் ஒரு காட்சியில் தங்கள் அபிமான நாயகர்களின் அருமை, பெருமைகளை சொல்லி காரசாரமாக மோதிக் கொள்வார்களாம்.

பிரியங்கா அஜித்தின் புகழ் பாட, வர்ஷா அதற்கு காரசாரமாக பதிலடி கொடுப்பதோடு, விஜய்யின் புகழ் பாடுவாராம். இப்படியாக இவர்களின் சண்டை கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வரை நடக்குமாம். படத்தில் தல ரசிகரையே பிரியங்கா மணந்து கொள்வது போலவும் காட்சிகளை வைத்துள்ளாராம்.

வருகிற ஏப்ரல் 10-ந் தேதி உலகமெங்கும் சுமார் 150 திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் இப்படத்தை சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries