நடிகை பார்வதி ஓமனக்குட்டனின் உடல் உறுப்புகள் தானம்

beb7fed8-757e-4c6e-af85-c89416296a3e_S_secvpfஅஜீத்துடன் ‘பில்லா-2’ படத்தில் பார்வதி ஓமனக்குட்டன் நடித்துள்ளார். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 2008–ல் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தற்போது பார்வதி ஓமனக்குட்டனுக்கு சமூக சேவை பணிகளில் தீவிர ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. ஆதரவற்றோருக்கு உதவ துவங்கியுள்ளார். அனாதை இல்லங்களுக்கும் அடிக்கடி போய் வருகிறார். இதற்கும் மேலாக உடல் உறுப்புகளையும் தானம் செய்கிறார்.

நிறைய நடிகர், நடிகைகள் கண்களை தானம் செய்து இருக்கிறார்கள். குறிப்பிட்ட சில நடிகர்கள் உறுப்பு தானம் செய்துள்ளனர். பார்வதி ஓமனக்குட்டனும் உடல் உறுப்புதான உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதுகுறித்து பார்வதி ஓமனக்குட்டன் கூறும்போது, உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு எடுத்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இறந்த பிறகு உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் நிறைய பேர் பயன் அடைவார்கள்.

உடல் உறுப்பு தானம் பற்றி முடிவு எடுத்ததும் என் தாய், தந்தை, சகோதரர் போன்றோரும் என்னுடன் வந்தார்கள். அவர்கள் எப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். எனது பிற்நத நாளில்தான் இந்த முடிவை எடுத்தேன்.

பிறந்த நாளை பார்ட்டி, மது விருந்து சாப்பாடு என கொண்டாடுவது எனக்கு பிடிக்காது. உடல் உறுப்பு தானம் போன்று ஆக்கப்பூர்வமாக மற்றவர்களுக்கு உதவிகள் செய்து கொண்டாடலாம் என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries