தொடங்கியது கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் படம் – ஃப்ரெஞ்ச் படத்தின் ரீமேக்

1426500817-1095பிரான்சில் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற படம், இன்டச்சபிள்ஸ். கழுத்துக்கு கீழே உடல் உறுப்புகள் செயலிழந்து படுக்கையில் முடங்கிப் போன உற்சாக இளைஞனுக்கும், இசையார்வமிக்க நபருக்கும் இடையில் ஏற்படும் நட்பை நகைச்சுவையாக சொன்ன படம், இன்டச்சபிள்ஸ்.

இதே கதையில் மலையாளத்தில் ஜெய்சூர்யா, அனூப்மேனன் நடிப்பிலும் ஒரு படம் வெளியானது.

இந்த ஃப்ரெஞ்ச் படத்தின் ரீமேக் உரிமையை முறைப்படி வாங்கி தமிழ், தெலுங்கில் எடுக்கின்றனர். கார்த்தி, நாகார்ஜுன் நடிக்கும் இந்தப் படத்தை வம்சி பைட்பாலி இயக்க பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது.

நேற்று இதன் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பை நடிகர் சிவகுமார் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். கோபி சுந்தர் இசையமைக்க, பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries