கவர்ச்சிக்கு மாறிய சிருஷ்டி டாங்கே

a9bed4cc-7316-44af-874b-77f6e2bdf964_S_secvpfதமிழில் ‘மேகா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இப்படத்தில் தாவணி அணிந்து குடும்ப பெண்ணாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இப்படத்தையடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘எனக்குள் ஒருவன்’ ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்களிலும் ஹோம்லி பெண்ணாக நடித்திருந்தார்.

இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிருஷ்டி டாங்கே, தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளார். இவர் தற்போது நடித்து வரும் படம் ‘ஒரு நொடியில்’. இப்படத்தில் சிருஷ்டி டாங்கே கவர்ச்சியாக நடித்திருக்கிறார். எம்.ஏ.சௌத்ரி இயக்கும் இப்படத்தை சார்பர்வேஷ் இசையமைக்கிறார். மகிசரலா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் 500 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் ஆவி, இன்னமும் இந்த ஊரில் பலரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது என்று எல்லோரும் பயந்து கொண்டிருக்கையில், அது உண்மையா இல்லையா? என்பதை கதை கருவாக வைத்து உருவாகி வருகிறது.

திகில் மற்றும் ஹாரர் படமான இப்படத்தை நல்லூர் சுரேஷ் வழங்க ஆக்கார் பட நிறுவனம் சார்பாக கே.கோடீஸ்வரராவ் தயாரித்து வருகின்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries