சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் தீக்‌ஷா சேத்?

1e01043e-020f-4d5c-8b18-91b29f832c24_S_secvpfசிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதையடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக தீக்‌ஷா சேத் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தீக்‌ஷா சேத் ஏற்கனவே விக்ரமுடன் இணைந்து ‘ராஜபாட்டை’ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.

செல்வராகவன் இயக்க இருக்கும் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. கவுதம் மேனன் படத்தை முடித்த பிறகு சிம்பு-செல்வராகவன் இணையும் புதிய படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online