மாஸ் படத்தில் இசையமைப்பாளர் தமன்!

1e8d84a9-edf6-4c0e-807c-b60df4d0795a_S_secvpfவெங்கட் பிரபு, இதுவரை இயக்கிய அனைத்து படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்து வருகிறார். அதுபோல் தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘மாஸ்’ படத்திற்கும் யுவன் இசையமைத்து வருகிறார்.

வெங்கட் பிரபு கடைசியாக இயக்கிய பிரியாணி படத்தில் இசையமைப்பாளர்கள் தமன், இமான், விஜய் ஆண்டனி, யுவன் ஆகியோர் இணைந்து ஒரு பாடலை பாடியிருந்தனர். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதுபோல், ‘மாஸ்’ படத்திலும் ஏதாவது ஒரு புதுமையை புகுத்த நினைத்த படக்குழு, இப்படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் தமனை இசையமைக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.

தமன் இசையமைக்கும் இந்த பாடல் ஒரு மாஸான கானா பாடலாக இருக்குமாம். மேலும், அந்தப் பாடலில் காதல் உணர்வும் கலந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.

‘மாஸ்’ படத்தில் சூர்யா நாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் ப்ரணிதா, பிரேம்ஜி, கருணாஸ், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries